செய்திகள்

தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் :தொடர்பாடல் நிறுவனங்களுக்கு TRC கோரிக்கை

தற்போதைய நிலைமையில் தொலைத் தொடர்பு கட்டணங்களை செலுத்துவதில் தாமதங்கள் ஏற்படக் கூடுமென்பதனால் மக்களுக்கு தொடர்பாடல் வசதிகளை தொடரக் கூடிய வகையில் அவர்களின் தொடர்பாடல் சேவைகளை துண்டிக்க வேண்டாமென இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு கையடக்க தொலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி தொடர்பாடல் சேவை நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த சலுகைகளை ஏப்ரல் இறுதி வரையில் தொடர்வதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் ஆணைக்குழு அந்த நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. -(3)