செய்திகள்

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : ஆந்திரா – தெலங்கானா முதல்வர்கள் மோதல்

தெலங்கானா மேலவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க, தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள் இடையே மோதல் ஏற்பட் டுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொலைபேசியை சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்ட தாக தெலுங்கு தேசம் கட்சி யினர் கொடுத்த புகாரின் பேரில், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மீது ஆந்திர போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

தெலங்கானா மேலவை தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடை பெற்றது. இதில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, நியமன எம்எல்ஏ எல்விஸ் ஸ்டீபன்சனிடம் ரூ.5 கோடி பேரம் பேசி, அதற்கு முன்பணமாக ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ரேவந்த் ரெட்டியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டீபன்சனிடம் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் உரையாடியதாக ஆடியோ ஒன்றை தெலங்கானா மாநில உள்ளூர் தொலைக்காட்சி நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் சந்திரபாபு நாயுடு, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்கும்படி பேசி உள்ளார்.

இதுகுறித்து ஆந்திர அரசின் ஆலோசகர் (தொலைத்தொடர்பு) பரக்கால பிரபாகர் நேற்று முன்தினம் கூறும்போது, “இந்த ஆடியோ போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றிருப்பது சந்திர பாபு நாயுடுவின் குரல் அல்ல. இந்த விவகாரத்தில் தெலங்கானா முதல்வரும், உள்துறை அமைச் சரும் பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

இதனிடையே, சந்திரபாபு நாயுடுவின் பேச்சை சட்ட விரோ தமாக ஒட்டுக் கேட்ட தெலங்கானா அரசைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் முதல்வர் கே.சந்திர சேகரராவ் மீது புகார் செய்துள்ளனர். இதன் பேரில்சந்திரசேகர ராவுக்கு எதிராக பல்வேறு பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.  (தி ஹிந்து -தமிழ் )