செய்திகள்

தொழிற்சங்க முரண்பாடுகள் தொடர்ந்தால் தொழிலாளர்களது சம்பள உயர்வு பாதிப்படையும்

தொழிற்சங்க முரண்பாடுகள் தொடர்ந்தால் தொழிலாளர்களது சம்பள உயர்வு கோரிக்கை பாதிக்கப்படுமென ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பு செயலாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இன்று சம்பள உயர்வு கோரி மெதுவான பணிகளில் ஈடுப்படும் போராட்டங்கள் நுவரெலியா மாவட்டத்தில் சகல தோட்ட பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.

இதில் அட்டன் தோட்ட பகுதிகளில் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 மேலும் தெரிவிக்கையில்..

தொழிலாளர்களது உரிமைகளையும் கோரிக்கைகளையும் வென்றெடுக்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றினைய வேண்டியது இக்காலத்தின் கட்டாய தேவையாகும்.

ஆனால் சிலர் பொது தேர்தலை இலக்கு வைத்து சம்பள விடயத்தை பிற்போட முயற்சிக்கின்றனர்.

தொழிற்சங்க கட்சி பேதங்களை மறந்து அனைத்து தரப்பினதும் பங்களிப்பு கிடைத்தால் ஆக்க பூர்வமான வெற்றியை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை விடுத்துள்ளார்.