செய்திகள்

தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கும்போது அவர்களை கட்சி ரீதியாக பிரிக்க நினைப்பது அப்பட்டமான காட்டி கொடுப்பாகும்

தோட்ட தொழிலாளருக்கு சம்பளத்தை அதிகரிக்க கோரி மலையகம் முழுவதும் தோட்டத் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கிவிட்டனர். பெருந்தோட்ட கம்பனிகளுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல முறை நியாயமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியும் பெருந்தோட்ட கம்பனிகாரர்கள் சமபளத்தை அதிகரித்து கொடுக்க மறுத்து வருகின்றது என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கடைசியாக நாளொன்றுக்கு அனைத்து கொடுப்பணவுகள் உள்ளடங்கலாக 700ஐ சம்பளத்தை வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் வாரத்திற்கு மூன்று நாட்களுக்க மட்டுமே வேலை வழங்கப்படுமென நிபந்தனை விதித்தனர். அத்துடன் வாரத்தின் ஏனைய மூன்று நாட்களுக்கு பறிக்கப்படும் தேயிலை கொழுந்திற்கு கிலோ ஒன்றிற்கு 25 வீதம் வழங்குவதாக கூறி இவ்வளவு காலம் நாட் கூலிகலாக இருந்த தோட்ட தொழிலாளர்களை அத்த கூலி காரர்களாக மாற்ற முயற்சித்த கம்பனிகாரர்களின் அடாவடித்தனத்தை அறிந்த மக்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கெதிராக கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது முற்றுமுழுதாக பெருந்தோட்ட கம்பனிகளுக்கெதிராக நியாயம் கோரி நடத்தப்படுகின்ற போராட்டமாகும். இந்த போராட்டத்தில் சகல தொழிலாளர்களும் கட்சிபேதமின்றி நடத்திவருகின்றனர். இங்கேயும் மலையகத்தின் சாபகேடு தனது விளையாட்டை அரங்கேற்ற துடியாய் துடிக்கிறது.

கம்பனிகளுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரசிற்கு எதிரான போராட்டமாக சிங்கள ஊடகங்களில் கதையை திருத்தி காட்டி அமைச்சு கொடுத்த எஜமானர்களை திருப்திப்படுத்த சில குழுக்கள் படாதபாடு பட்டுவருகின்றன. சம்பள உயர்வுக்காக தோட்டத் தொழிலாளி வீதிக்கு இறங்கி போராடுகின்ற போது அரசியல் இலாபம் தேடுவது பச்சை துரோகமாகும். தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கும்போது அவர்களை கட்சி ரீதியாக பிரிக்க நினைப்பது அப்பட்டமான காட்டி கொடுப்பாகும்.

அதுமட்டுமல்ல இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்களின் போது அதில் சில புல்லுருவிகளை நுளையவிட்டடு போராட்டத்தை மழுங்கடிக்க முயற்சிப்பது முட்டாள்தனமாகும்.

மக்களை மடையர்கள் என எவரும் எண்ணிவிடக் கூடாது. சம்பளம் வழங்க மறுப்பவர்கள் பெருந்தோட்ட கம்பனிகாரர்கள். இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிரானது. இடைக்கால ஒப்பந்தம் செய்து எதிர்கால கூட்டு ஒப்பந்தத்திற்கு வேட்டு வைத்தவர்கள் கம்பனிகாரர்களும் நாளொன்றுக்கு 100ரூபா என இரண்டு மாத இடைக்கால கொடுப்பணவுக்கு உரிமைகோருபவர்களுமே.

இது தேர்தல் காலமல்ல வேதன உயர்விற்காக ஒற்றுமையாக போராடும் காலம். காட்டிக்கொடுத்து மீண்டும் சம்பளத்திற்கு வேட்டுவைத்து விட வேண்டாம். எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

n10