செய்திகள்

தொழில் இல்லாமல் திண்டாடும் சம்பூர் மக்கள்

-கருனாதனன் 

மூதூர் கிழக்கு சம்பூர் கூனித்தீவு கிராமம் குடியேற்றப்பட்டு அவசரமாக மேற் கொண்ட கூனித்தீவு நாவலர் வித்தியாலயத்தின் குடிநீர் திட்டம் திறந்து வைக்கப்பட்டு அன்று ஒரு நாள் தவிர இன்று வரை கிடைக்கப்பட வில்லை என பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

2006 ம் ஆண்டு 04 ம் மாதம் 26 ம் திகதி எரிகனை தாக்குதல் மூலம் தமது சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்ட சம்பூர் நவரெட்ணபுர மக்கள் முன்னால் ஜனாதிபதி மகிந்தவுடைய ஆட்சியின் போது சம்பூர் மக்களின் விடா முயற்சி மற்றும் தமிழ்அரசியல் பிரதிநிதிகளின் தொடர்சியான அழுத்தமும் சர்வதேசத்தின் அழுத்தங்களும் சேர்ந்து மூதூர் பிரதேச செயலகம் மேற்பார்வையில் சம்பூர் அனல் மின்சார நிலையத்தை  சூழவுள்ள சில இடங்களிலும் மற்றும் உயர்பாது காப்பு வலயத்தனுள் சில கிராமங்களிலும் உள்ள குடியிருப்பு காணிகளில் மக்கள் குடியேற்றபட்டனர்.

4இந்த அடிப்படையில் அவசர அவசரமாக எவ்வித அடிப்படை வசதியும் பூர்த்தி செய்யப்படாத நவரெட்ணபுரம் கிராமம் 2013 பெப்ரவரி மாதம் 04ம் திகதி குடியேற்றபட்டது. இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளில் மிக முக்கியமானதாக காணப்படும் பாடசாலையான கூனித்தீவு நாவலர் வித்தியாலயம் 09 ம் ஆண்டு வரையான பாடசாலை ஒன்றையும் திறந்து வைத்தனர்.

இந்த பாடசாலையானது யுத்தத்திற்கு முன்னர் மூன்று பெரிய கட்டிடங்களையும் ஆசிரியர் விடுதிகளையும் கொண்ட அப்பாடசாலையானது தற்போது ஒரே கட்டிடத்தில் மட்டுமே இயங்கி வருகின்றது.

ஆயினும் 2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் அளவில் 5 மில்லியன் ரூபாய் செலவில் 4.5 கிலோமீட்டர் தூரம் குடிநீர் குளாய் பதித்து கொண்டுவரப்பட்ட குடி நீர் திட்டமானது.திறப்பு விழா தினம் அன்று மட்டுமே குடிநீர் வந்தது அதிலிருந்து 04 மாத காலமாக குடிநீர் இல்லாது பாடசாலை மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதற்காண காரணத்தை ஆராய்ந்த போதுசம்பூர் கடற்படை பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ள சம்பூர் மக்களின் பூர்வீக காணி இடத்திலேயே இப்பகுதிகளுக்கான நீரை பம் செய்து அனுப்பும் மோட்டார் உள்ளது. இதற்கான மின்சாரத்தை கடற்படையினரே தற்போது வழங்க வேண்டும்.
எனினும் தற்போது அதனை பயன்படுத்தும் கடற்படையினர் மின்சார சபையினரும் பல மில்லியன் பணம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆகவே பாடசாலைக்கான குடிநீரை தாங்கிக்கு ஏற்றி விநியோகிக்கவும் கடற்படை அதிகாரிகள்  மறுத்து வருகின்றனர் என பாடசாலை சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே 5 மில்லியன் செலவில் நிர்மாணிக்கபட்ட குடிநீர் திட்டம் தற்போது பயனின்றி காணப்படுகின்றது.
யுத்தத்திற்கு முன்னர் போதிய குடிநீர்வசதியை கொண்டிருந்த நவரெட்ணபுர கிராத்தின் குடிநீர் நிலையங்கள் தற்போது இல்லை மேலும் இக்கிராமத்தில் 09 வருடங்களுக்கு முன் மக்கள் இடம் பெயருவதற்கு முன்பே 16 வீடுகளில் தேசிய நீர்வழங்கள் அதிகாரசபையின் குடிநீர் குளாய் இருந்தாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

IMG_0461தற்போது 143 குடும்பங்கள் வாழும் இக்கிராமத்தில் 02 குடிநீர் கிணறுகள் மட்டுமே காணப்படுகிறது அதுவும் தனியார் காணிகளில் அவர்களின் சொந்த செலவில் அமைத்த கிணறுகளிலேயெ பொது மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.சிலர் குறிப்பிடும் பொது மழை காலம் என்றால் மழை நீரை பிடித்து சுடவைத்து அதனை நாம் எமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தோம் எனவும் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் மூதூர் பிரதேச செயலகத்தால் கடந்த ஆண்டு ஏற்பட்ட வரட்சியின் போது பவுசர்களில் கொண்டு சென்று விநியோகித்த குடி திட்டமும் தற்போது 06 மாதங்களுக்கு மேல் நிறுத்தபட்டுள்ளமை மேலும் குடிநீர் தொடர்பான பிரச்சினையை இம் மக்களிடையே அதிகரிக்க வைத்துள்ளது.

போக்குவரத்து தொடர்பாக நாம் பார்ப்போமனால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையில் இடம் பெறுகிறது. இது காலை 10 மணிக்கும் இரண்டாவது தடவையாக  மாலை 2 மணிக்கு இடம் பெருகிறது. மாலையில் போக்கவரத்து சேவை பெறும் பாலும் நிச்சயமாக  எதிர்பார்க்க முடியாது. என்பதுடன் இந்த போக்குவரத்து பிரச்சினையால் 09 ம் ஆண்டுக்கு மேல் கல்வி கற்கும் மாணவர்கள்’ தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.  சாதாரணமாக நவரட்ணபுரத்தில் இருந்து மூதூருக்கு சென்று வர முற்சக்சரவண்டிக்கான செலவு 800 ரூபாய் அளவில் செலவாகும் இந்த செலவை ஈடுசெய்யும் அளவிற்கு தமக்கான வருமானம் இங்கு கிடைப்பதில்லை எனவும் கிராம மக்கள் கவலையடைகினறனர்.

முன்னொரு காலத்தில் கூனித்தீவு நவரெட்ணபுரம் என்றால் தங்க நகை ஆபரணங்கள் செய்வதற்கு பெயர் பெற்ற கிராமமாகும் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் இலங்கை முழுவதும் உள்ள பலர் இங்குள்ள நகை தொழில் செய்யும் ஆசாரிகளின் பழுதில்லாத வேலைகளின் நுட்பத்திற்காக இங்கே வந்து தமது நகைகளை செய்து  செல்வார்கள் எனவே அவ்வாறு செல்வச் செழிப்போடு இருந்த இக்கிராமம் தற்போது தொழில் இல்லாமல் திண்டாடுகிறது.

2

இங்கு இடம் பெரும் இந்தியா வீட்டுத்திட்டத்தில் கூலியாட்களாக வேலை செய்து தமது வாழ்வாதாரத்தை நடாத்திச் செல்லும் இக் கிராம ஆண்கள் இத்திட்டம் முடிவடையந்த பின்னர் தமது வாழ்வாதார தொழில் என்ன என்ற கேள்விக்கு விடை இல்லாது காணப்படுகின்றனர்.இக்கிராம மக்களுகளை குடியேற்றிய அரசு அவர்களுக்கு சொந்தமான நூற்றுக் கணக்காண விவசாய நிலங்களை உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் அனல் மின்சார நிலையம் எனற் போர்வையில் முடக்கி வைத்துள்ளது.
இவ்வாறான அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுடன் மூதூர் கிழக்கு குடியேற்றங்கள் அவசர அவசரமாக சர்வதேசத்தை திருப்திப் படுத்துவதற்காகவும் தமது அரசியல் ஆதாயத்தற்காகவும் நடைபெற்று வருகின்றமையே தவிற இதனால் அப் பகுதி மக்களின் உண்மையான தேவைகள் தீர்க்கப்படுவது கிடையாது.

பல்வேறு உயிர்ச் சேதம் உடமைகள் இழப்பு மற்றும் 08 வருட அகதி முகாம் வாழ்வு ஆகிய பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வந்த நவரெட்ணபுரம் மக்களின் உண்மையான நிலையை உணர்ந்து புதிய அரசு செயற்பட வேண்டும்.அத்துடன் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக காணப்படும் விவசாய நிலங்களையும் முழுமையாக விடுவிப்பதன் மூலமே தமது எதிர்கால வாழ்வை ஏனைய இலங்கை பிரஜைகள் போல இம்மக்களால் கட்டியேழுப்ப முடியும். என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.