செய்திகள்

தொழில் தேடி குவைட் சென்ற 68 பெண்கள் இலங்கை திரும்பினர்

பணிப்பெண்களாக குவைட்டுக்கு சென்று அங்கு பணிபுரிந்த இடங்களில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான நிலையில் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்த 68 பெண்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
மாத்தறை , காலி , குருநாகல் , அநுராதபுரம் போன்ற பகுதிகளை சேர்ந்த பெண்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் பல்வேறு வேலை வாய்ப்பு முகவர்களினால் ஏமாற்றபட்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் தாம் அங்கு பெரும் துன்பங்களை எதிர்கொண்டதாகவும் அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
n10