செய்திகள்

தோட்டத் தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் – ராமலிங்கம் சந்திரசேகர்

மார்ச் மாதம் 31ம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதால், தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென இப்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் தலைவர்களென கூறிவரும் தொழிற்சங்க தலைவர்கள் தோட்டத் தலைவர்களின் சம்பளம் தொடர்பாக நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்காத நிலையில், அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் வழமைப்போன்று இன்றும் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தை 800 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது என அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 800 ரூபாவை கொடுக்க வேண்டும் என முதலாளித்துவ சம்மேளனத்தை வழியுறுத்தும், மக்களை தெளிவூட்டும் துண்டு பிரசுர விநியோகம் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் 15.03.2015 அன்று ஹற்றன் நகரில் விநியோகிகப்பட்டபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில் :-

1999 முதல் 2013 வரையிலான கூட்டு ஒப்பந்தம் மூலமாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அது ஒரு தடவையாவது வாழ்வதற்கு போதுமான சம்பளத்தை அதிகரிக்கப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட சம்பளமும் உரிய வகையில் கிடைக்காது வெட்டப்படுகின்றது. 2013ல் தோட்டத் தொழிலாளர்களின் சகல கொடுப்பனவுகளுடன் அடங்கிய 620 ரூபா 30-35 சதவீதமான தொழிலாளர்களுக்கே கிடைக்க கூடியதாயிருக்கின்றது. பெருவாரியான தொழிலாளர்களுக்கு வரவுக்கான கொடுப்பனவான 140 ரூபாய் கிடைப்பதில்லை. கிடைக்காத வகையிலும் இலக்கை அடையாத முடியாத வகையிலுமே இந்த சம்பள முறை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவுக்கான கொடுப்பனவு கிடைக்காத தோட்ட தொழிலாளர்கள் 3500 ரூபாவை மாதாந்தம் இழந்துள்ளனர். அதன் காரணமாக பெருவாரியான தொழிலாளர்களுக்கு மாத வருமானம் வெறும் 11250 ரூபாய் மட்டுமேயாகும்.

கடந்த 15 வருடங்களாக தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை செலவுக்கு ஏற்ற சம்பளத்தை பெற்று கொள்வதற்கு இந்த கூட்டு ஒப்பந்த செயல்முறைகளால் முடியாது போயுள்ளது. அதேபோன்று தோட்ட தொழிலாளர்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரையில் சகல கருமங்களையும் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இறுக்கப்பட்டு பல அரசியல்வாதிகளினதும் தொழிற்சங்க தலைவர்களினதும் தேவைகளின் நிமித்தம் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது இந்த கூட்டு ஒப்பந்த நடைமுறையாலாகும். அதனால் இதை மாற்றியமைத்தாக வேண்டும். அதை நீண்ட நாள் வேலைத்திட்டத்தின் மூலமாகவே சாதிக்க முடியும்.

மலையகத்தில் பாரம்பரிய தொழிற்சங்கம் என கூறும் நபர்கள் கூட்டு ஒப்பந்ததின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கின்றார்கள். அவ்வாறு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படுமாயின் அது தொடர்பாக மகிழ்ச்சியடைவது நாங்கள் மாத்திரமே ஆகும்.

மலையகத்தில் இருந்த விசேடமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொண்டமான் இன்று மக்கள் மத்தியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்.

தோட்ட தொழிலாளர்களும் மலையகத்து இளைஞர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை படிப்படியாக விட்டு விலகி வருகின்றனர். இதன் காரணமாக வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்வதற்கும் எதிர்காலத்தில் இந்த அமைச்சு சுகங்களை அனுபவிப்பதை நோக்கமாக கொண்டு தொண்டமானால் வெளியிடப்படுகின்ற புலம்பளே இந்த ஆயிரம் ரூபாவே தவிர இது மக்களுக்கு சாத்தியப்படக்கூடிய நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய விடயமில்லை என்பதை நாம் கூறிக்கொள்கின்றோம்.

அதேபோன்று இந்த அரசாங்கத்திற்கு கூறுவது என்னவென்றால் ஏனைய தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டிருக்கின்ற பொழுது தோட்ட தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஆவணங்களை செய்யும்படி உரிய அரசாங்கத்திடமும் உரிய அதிகாரிகளிடமும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் வேண்டுக்கோள் விடுக்கின்றோம் என்றார்.