செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி நுவரெலியாவில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் (வீடியோ, படங்கள்)

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி பெருந்தோட்ட நிறுவனங்களுக்கெதிரான கவனயீர்ப்புப் போராட்டங்கள் இன்று நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தொழிலாளர்கள் கலந்து கொண்டு தமக்கான அடிப்படைச்சம்பளமான 450 ரூபாவை 800 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் அத்துடன் ஏனைய கொடுப்பனவுகள் அடங்கலாக 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுத் தருவோம் என்று உறுதி கூறியவர்கள் இன்று நழுவல் போக்கான பதில்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்விதமான நிலைப்பாடும் எடுக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் விரக்தி நிலையை அடைந்துள்ளனர். எனவே எங்களது நியாயமான சம்பளத்தினை வலியுறுத்தி நாம் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அந்தவகையில் மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் இடம் பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=a5nVkvMQdeg” width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=Zb6c0i0oTjs&feature=youtu.be” width=”500″ height=”300″]