செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்காது போன 1000 ரூபா

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் கிடைக்குமென வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த போதும் அந்த சம்பள அதிகரிப்பு இம்முறையும் மேற்கொள்ளப்படவில்லை.
தைப்பொங்கல் தினத்தன்று அரசாங்கத்தினால் இதற்கான வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் இதனை உறுதிப்படுத்தியதுடன் நிச்சயமாக ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 1000 ரூபா சம்பளம் கிடைக்குமென அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனபோதும் கடந்த காலங்களில் அதற்காக முதலாளிமார் சம்மேளனத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கவில்லை.
எவ்வாறாயினும் ஏப்ரல் 10ஆம் திகதி திட்டமிட்டப்படி 1000 ரூபா வழங்கப்படுமென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 8ஆம் திகதி முதல் சம்பளம் வழங்கப்படுகின்ற போதும் அவர்களுக்கு அவ்வாறாக சம்பள அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நிலைமையை காரணத்தால் 1000 ரூபா சம்பள விடயத்தில் இணக்கப்பாடுகளை எட்டமுடியாது போயுள்ளதாக கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)