செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ருபா சம்களம்: மார்ச் 5 முதல் அமுலாக வேண்டுமென்று சம்பள நிர்ணய சபை அறிவிப்பு!

மார்ச் 5 ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டுமென்று சம்பள நிர்ணய சபை தெரிவித்துள்ளது.

அதற்கான வர்த்தமானியை இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் அரச அச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் 5 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

900 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 100 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அடங்கலாக ஆயிரம் ரூபாவை ஙழங்க வேணடுமென்று அண்மையில் சம்பள நிர்ணய சபையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டீருந்தமை குறிப்பிடத்தப்பது. -(3)