செய்திகள்

தோட்டத் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அட்டன் நோட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்து வனராஜா மேற்பிரிவு தோட்ட தொழிலாளிகள் 22.04.2015 அன்று காலை 8.30 மணியளவில் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்த பின் அட்டன் நோட்டன் பிரதான வீதியை மறித்து வனராஜா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

இரவு நேரங்களிலேயே கழிவுகளை இவ்வாறு வீசுவதாகவும் இவ்வாறு கழிவுகளை வீசுவதனால் சூழல் மாசடைகின்றதாகவும் தோட்ட தொழிலாளிகள் தொழிலில் ஈடுப்பட முடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றதாக ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தோட்ட தொழிலாளிகள் தெரிவித்தனா்.

இவ்வாறு கழிவுகளை யார் கொட்டுவது என தெரியவில்லை என தோட்ட தொழிலாளிகள் தெரிவித்தனா்.

அத்தோடு பயணம் செய்யும் பயணிகளும் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரிவித்தும் அவா்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் குற்றம் சுமத்தினா்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த அட்டன் பொலிஸாரின் தலையீட்டின் பின் ஆர்ப்பாட்டகாரா்கள் கலைந்து சென்றனா்.

DSC09830

DSC09858

DSC09864

Still0419_00003