செய்திகள்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 18ம் திகதி கொழும்பில்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான  கூட்டு ஒப்பந்தம் தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 18ம் திகதி கொழும்;பில் நடைபெறவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ள நிலையில்   புதிய ஒப்பந்தம் தொடர்பான முதலாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது.
இதன்படி 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை   எதிர்வரும் 18ம் திகதி நடத்துவதற்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயும் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது அடிப்படை சம்பளம் கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகிய இந்த பேச்சுவார்த்தையில் கலந்தக்கொள்ளவுள்ளன.