செய்திகள்

தோட்ட தொழிலாளியின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை

தோட்ட தொழிலாளியின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை சீ்.எல்.எப் கேட்போர் கூடத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

 தொடர்ந்து இப்பேச்சுவார்த்தையில் உரையாட்டிய பொதுச் செயலாளர் இன்று பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும், கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்குமிடையே இடம்பெறவிருக்கும் சம்பள பேச்சுவார்த்தையில் சுமுகமான ஒரு தீர்மானம் கிடைக்க பெறாவிடின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாபெரும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவதாக தெரிவித்தர்.

 இப்பேச்சுவார்தையில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட, இ.தொ.காவின் தலைவர் முத்து சிவலிங்கம் இ.தொ.காவின் உப தலைவர்கள், பிராந்திய இயக்குனர்கள், இ.தொ.கா மகளிர் அணி இணைப்பாளர்கள் மற்றும் இ.தொ.கா வின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.