செய்திகள்

தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு

சொந்த வசிப்பிடமின்றி , முகவரியற்று லயன் வீடுகளில் வாழ்ந்து வரும் பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் புதிய நல்லாட்சி அரசின் வேலைத்திட்டத்தின் கீழ்,தோட்டத் தொழி­லாளர் குடும்பம் ஒன்­றுக்கு ஏழு பேர்ச் காணி­யுடனான உறுதிப் பத்­திரம் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்­கி­ழமை பண்­டா­ர­வளை மாந­கர சபை மண்­ட­பத்தில் இடம்பெற்றது.

பெருந்­தோட்டக் கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்சர் கே.வேலா­யு­தத்தின் முயற்­சியின் பேரில் அவ­ரது தலை­மை­யி­லேயே நடை­பெற்ற இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்ட பிர­தமர் ரணில் விக்­கி­ரமசிங்க தோட்டத் தொழி­லாளர் குடும்­பத்­துக்­கான முத­லா­வது காணி உறு­திப்­பத்­தி­ரத்தை வழங்கினார்.

தோட்டத் தொழி­லாளர் குடும்­பங்­க­ளுக்கு முக­வ­ரியைப் பெற்றுக் கொடுத்தல் எனும் தொனிப்­பொ­ருளில் குடும்பம் ஒன்­றுக்கு ஏழு பேர்ச் காணி உறு­தியை வழங்கும் ஆரம்ப நிகழ்­வா­கவே பண்­டா­ர­வ­ளையில் இடம்­பெ­ற்றதாக பெருந்­தோட்ட இரா­ஜாங்க அமைச்சர் கே.வேலா­யுதம் தெரி­வித்தார்.

இதனைத் தொடர்ந்து மலை­ய­கத்தின் அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் இத்­திட்டம் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வ­துடன் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளா­கிய ஒவ்­வொரு குடும்­பத்­துக்கும் ஏழு பேர்ச் காணி­யு­ட­னான உறு­தியும் பெற்றுக் கொடுக்­கப்­படும் என்றும் அமைச்சர் வேலா­யுதம் தெரி­வித்­துள்ளார்.

உறுதிப் பத்­தி­ரங்­களில் குடும்­ப­மொன்றின் கணவன் மனைவி என்ற இரு­வ­ரையும் சம நிலைப்­ப­டுத்­திய வகையில் உத்­த­ர­வா­தப்­ப­டுத்தி சட்­ட­பூர்­வ­மாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வழங்­கப்­படும் இக்­காணி எவ்­வ­கை­யிலும் வெளி­யா­ருக்கு விற்­பனை செய்­ய­மு­டி­யாத வகையில் அமைந்­துள்­ளது.

ஆயினும் காணியின் கட்­டி­டங்கள் எதுவும் நிரு­மா­னிப்­ப­தற்கு வழங்­கப்­படும் காணி உறு­திப்­பத்­தி­ரத்தை வங்­கியில் வைத்து கண­வனும் மனை­வியும் இணைந்த வகையில் கடன்கள் பெற்றுக் கொள்­ளவும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்­நி­கழ்வில் அமைச்­சர்­க­ளான பி.திகாம்­பரம், வி.இரா­தா­கி­ருஸ்ணன், லக்ஸ்மன் கிரி­யெல்ல, ஊவா முத­ல­மைச்சர் ஹரீன் பெர்­ணான்டோ, தமிழ்க்­கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ், உறுப்­பினர் வே.ருத்திரதீபன், முன்னாள் ஊவா மாகாண உறுப்பினர் அ.அரவிந்தகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

இதன்போது தோட்டத்தொழிலாளரின் 200 வருட வரலாற்றை ஞாபகப்படுத்தும் ஆவணப்படமும் காண்பிக்கப்பட்டது.

Ranil (1) Ranil (2) Ranil (3) Ranil (5) Ranil (6) Ranil (8)