செய்திகள்

தோட்ட வீதிகள், பாலங்கள் புனரமைக்கும் துரித வேலைத்திட்டம் ஆரம்பம்

தோட்ட கிராமபுர வீதிகள் மற்றும் பாலங்கள் புனரமைப்புக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் துரித கதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உள்ளிட்ட நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல ஆகியோரின் பணிப்புரையின் கீழ் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு பொது வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு முழு பொறப்புகளும் வழங்கப்பட்டு தோட்ட பாதைகள் மற்றும் பாலங்கள் புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்க அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய டயகம கிழக்கு தோட்டத்திற்கான பாலங்கள் இரண்டு புனரமைக்கப்பட்டு நேற்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.இராஜாராம், மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

N5