செய்திகள்

தோற்கடிக்கும் சதித்திட்டம் இருந்ததென்றால் கேட்டு வாங்கித் தின்றது ஏன்? மஹிந்தவை கேட்கும் பொதுபல சேனா

தோல்வியுற்ற பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவரான பாதையில் பயணிப்பாராக இருந்தால் தங்களால் எதுவும் செய்ய முடியாதென பொது பல சேனா தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள பொது பல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரான்ஸ் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றில் மேற்குலக சக்திகளுடன் சேர்ந்து தன்னை தோற்கடிக்கும் செயற்பாடுகளில் பொது பல சேனா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையிலேயே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொது பல சேனா தொடர்பாக அவர் என்ன குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் நாட்டை மீட்டவர் என்ற ரீதியில் அவருக்குறிய மரியாதைகளை நாம் வழங்குவோம். எவ்வாறாயினும் அவருக்கு எதிரான சூழ்ச்சிகள் இருந்திருக்குமென்றால் அவர் ஏன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே தேர்தலுக்கு சென்று கேட்டு வாங்கித் தோல்வியை பெற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியுற்ற பின்னரும் மஹிந்த ராஜபக்ஷ தவரான பாதையில் பயணிப்பாராக இருந்தால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.