செய்திகள்

தோல்விக்கு காரணம் குடும்ப ஆட்சி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: நாமல் ராஜபக்ஷ

குடும்ப ஆட்சியே தாங்கள் படுதோல்வியடைய வழிவகுத்தது என்ற குற்றச்சாட்டை, முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

அவரது தந்தை மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் இடையே உள்ள நெருக்கமான பின்னப்பட்ட உறவுவே இலங்கையில் போரை முடிக்கக் காரணமாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே நாமல் இவ்வாறு கூறியுள்ளார். என் தந்தை அரச தலைவர்களுடன் சேர்ந்து வலுவான முடிவுகளை எடுக்க முடிந்தது, ஆனால் ஒரு தலைவருக்கு தான் நம்பக் கூடிய ஒருவர் அவசியம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் ஒருவரை ஒருவர் நம்பினோம் எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் புதல்வராக தான்  இருந்தது தவறா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை கடந்த 9 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தவேளை, தனது இல்லத்தில் பல முக்கிய நபர்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் அவரச நிலையை பிரகடனம் செய்வது குறித்து ஆராய்ததாக வெளியான குற்றச்சாட்டையும் இதன்போது மறுத்துள்ளார்.