செய்திகள்

தோல்வியுற்றால் அமைதியாக இருப்பதே தலைமைக்கு அழகு: மஹிந்தவை சாடும் சந்திரிகா

நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக செயற்படுமானால் இன்று பிரதமர் பதவி கேட்கும் சிலர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா,

கடந்த அரசாங்க காலத்தில் ஊழல், மோசடி, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இன்று அதிகாரத்திற்கு வர துடிக்கின்றனர். உண்மையில் இவர்கள் சிறை செல்ல வேண்டியவர்களே. குற்றம் இழைத்திருப்பின் நாட்டு மன்னராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மனிதாபிமான கட்சி என்று பெயர் எடுத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சிலரின் செயற்பாடுகளால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கறுப்பு கறைப்படிந்தது.

எனினும் ஜனவரி 8 ஆம் திகதி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அந்த ஆட்சியை வீட்டுக்கு விரட்டினர். ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின் முக்கிய மான நபர்கள் வாழக்கூடிய நாடாக இலங்கையை மாற்றி புது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளோம். முடிந்து போன சந்தர்ப்பத்தை மீண்டும் அழைத்து அழிவுக்குச் செல்ல சிலர் முயற்சிக்கின்றனர்.

குற்றம் செய்தால் சட்டம், நீதிமன்றம் சரியாக செயற்பட்டால் இன்று பிரதமர் பதவி கேட்பவர்கள் சிறையில் இருப்பர். அப்படி செய்யாது ஐயோ பாவம் என்று அவர்களுக்கு அமைதியாக இருக்க இட மளித்துள்ளோம்.

இவ்வாறானவர்களுக்கு மீண்டும் அதிகாரத்தை கொடுக்க நினைப்பது மக்களின் எதிர்பார்ப்புக்களை தூக்கி நிலத்தில் அடிப்பதற்கு ஒப்பாகும். எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் தவறு செய்தால் சிறை செல்ல வேண்டும். தோல்வியுற்றால் வீடு சென்று வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும். அரசியல் தலைவர் ஒருவரிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்பு அது.

அதை விடுத்து தினமும் இதில் தொங்கிக்கொண்டு அட்டை போல இரத்தம் குடிப்பது சரியான அரசியல் தலைமை இல்லை. இலங்கை ஹிட்லர் தேசம் அல்ல. கொலைசெய்து கொண்டு ஊழல் செய்து கொண்டு இங்கு இருக்க முடியாது. அதனால்தான் 9 வருட குறுகிய காலத்தில் மக்கள் அணிதிரண்டு அவர்களை வீட்டுக்கு விரட்டி அடித்தனர்.

பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை பாது காப்பது மக்களின் பொறுப்பு. அதற்கென மக்களுடன் சேர்ந்து எந்தவொரு போராட் டத்திற்கும் செல்ல நாம் தயார். இலங்கையை பெறுமதியான மக்கள் வாழும் நாடாக மாற்றி அமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.