செய்திகள்

தோழா படம் வெளியாவதற்கு தடையா?

வம்சி இயக்கத்தில் நாகர்ஜுனாகார்த்திதமன்னா நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகயிருக்கும் புதிய படம் தோழா. தற்போது இந்த திரைப்படத்துக்கு தடை கேட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் தோழா என்ற பெயரில் தமிழில் ஒரு படம் தயாரானது, அதில் பிரேம்ஜி அமரன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுந்தரேஸ்வரன் என்கிற சுந்தரம், தன்னுடைய அனுமதியின்றி தோழா என்ற தலைப்பை பயன்படுத்தியதாக பிவிபி சினிமா, இயக்குமர் வம்சி, கார்த்தி மற்றும் நாகார்ஜுனா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்தப் படத்தை எந்த வடிவிலும் வெளியிட தனது மனுவில் தடை கோரியுள்ளார்.

சென்னை 14வது உதவி சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு இன்று  காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

 

N5