செய்திகள்

த்ரிஷா – வருண் உறவில் விரிசலா? உறுதிப்படுத்தும் ஊடகங்கள்

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணியில் இருப்பவர் த்ரிஷா.

இவருக்கும், தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் 23 -ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணம் இந்தாண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தெலுங்கு மீடியாக்களில் த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து விசாரிக்கையில் இந்த தகவல் உண்மை என்பது போல் தான் தெரிகிறது. இதனால் தான் த்ரிஷா, வருண்மணியன் தயாரிக்கும் படத்திலிருந்து விலகினார் என கூறப்படுகிறது. சமீபத்தில் வருண்மணியனின் குடும்ப நிகழ்ச்சியொன்று நடந்துள்ளது. இதில் அவருடைய உறவினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

ஆனால் த்ரிஷா சென்னையிலிருந்தும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் நிச்சயதார்த்தத்தின் போது வருண்மணியன் அணிந்த மோதிரத்தையும் த்ரிஷா சமீபகாலமாக அணியவில்லையாம். இதையடுத்தே த்ரிஷா – வருண்மணியன் பிரச்னை வெளியில் கசியத் தொடங்கியது. இரண்டு பேருக்கும் சில விஷயங்களில் ஒத்துப்போகவில்லை என்றும் இதனால் இவர்கள் திருமணம் நின்றுவிட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.