செய்திகள்

த்ரிஷா – வருண் திருமணம் நின்று போனது ஏன்? மனம் திறந்து பேசும் திரிஷா அம்மா

த்ரிஷா – வருண்மணியன் திருமணம் நின்று போனது உண்மையா? இல்லையா? என்பது குறித்த மின்னல்வேகச் செய்திகள் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது.

இதுபற்றி இதுவரை த்ரிஷா வீட்டிலோ, வருண் வீட்டிலோ யாரும் வாய் திறக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் திருமணம் குறித்து த்ரிஷாவின் அம்மா உமா, நம்மிடம் மனம் திறந்தார்.

“த்ரிஷாவின் கல்யாணம் சம்மந்தமா அவங்க அவங்க மனசுக்கு என்னவெல்லாம் தோணுதோ, அப்படி இஷ்டத்துக்கு எழுதிக்கிட்டு வர்றாங்க. இது ஒரு சென்சிட்டிவ்வான விஷயம். அதனாலதான் இதுவரைக்கும் வாய் திறக்காம இருந்தேன்.

பத்திரிகையில எல்லாம் ‘த்ரிஷா திருமணத்துக்கு பிறகு நடிக்கறது வருணுக்கும், அவரது குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள்’ என்று தங்களுக்கு தோணுறதை எல்லாம் எழுதறாங்க. துளிகூட அதில் உண்மை இல்லை.

த்ரிஷா சினிமாவுல நடிக்கிறார்னு தெரிஞ்சுதான் பொண்ணு பார்க்க வந்தாங்க. புதுசாவா சினிமாவுல த்ரிஷா நடிக்கிறார். ஏற்கெனவே ஏகப்பட்ட படத்துல நடிச்சவர்னு தெரிந்துதானே நிச்சயம் செய்தாங்க.

கல்யாணத்துக்கு அப்புறமும் நடிக்கலாம்னு த்ரிஷாவை, வருண் என்கரேஜ் செய்து கொண்டு இருந்தார் அதுதான் நிஜம். அதுமட்டுமில்ல, த்ரிஷா சினிமாவுல நடிக்கறது அவங்க குடும்பத்தோட பெருமையாத்தான் நினைச்சாங்க.

நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகும்கூட நிறைய புதுப்படத்துக்கு த்ரிஷா தேதி கொடுத்து இருக்கிறது வருண் ஃபேமிலிக்கு நல்லாவே தெரியும். கல்யாணத்துக்கு பிறகு த்ரிஷா நடிக்கக்கூடாதுன்னு வருண் குடும்பத்தார் சொல்லி இருந்தாங்கன்னா நாங்க புதுப்படத்தை கமிட் செய்தே இருக்க மாட்டோம்.

நானும், த்ரிஷாவும் சம்மந்தப்பட்ட விஷயம்னா, யார்கிட்டேயும் அபிப்பிராயம் கேட்க வேண்டியது இல்லை. எல்லாத்தையும் ஓப்பனா பேசிடுவேன். த்ரிஷா கல்யாணம் நின்னுபோன விஷயத்துல பெரியவங்க பலபேர் சம்மந்தப்பட்டு இருக்காங்க. அதுமட்டுமில்லே, இன்னும் நிறையபேர் இதுல இன்வால்வ் ஆகி இருக்காங்க. அவங்க எல்லார் மேலேயும் எனக்கு நல்ல மரியாதை இருக்கு.

அதனால் எல்லாத்தையும் வாய் திறந்து பேச முடியாது, பேசறது நாகரீகம் கிடையாது. நாங்க ஏதாவது வாய் திறந்து பேசப்போயி, அதைப்பத்தி வேற மாதிரி திரிச்சு எழுதிடுவாங்க. அதனால அந்த பெரியவங்களோட மனசு காயப்படுறதுக்கு நாங்க காரணமா இருக்க விரும்பலை.

ஒத்துவராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு வாழறது எந்த விதத்துல நியாயம்? சில விஷயங்கள் சரிப்பட்டு வரலைன்னா பிரிந்து விடுவது பெட்டர். அதுக்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் மனக்குழப்பம்தான் வரும். எல்லாருக்கும் அவங்க அவங்களுக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதைத் தேடிப் போக வேண்டியதுதான்.

இப்போ த்ரிஷாவோட கவனம் எல்லாம் புதுசா தேதி கொடுத்து இருக்குற படங்களின் மேலதான். அடுத்து கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதுக்கப்புறம் செல்வராகவன் டைரக்‌ஷன்ல ஒப்பந்தமாகி இருக்குறார்” என்றார்.