செய்திகள்

த.மு. கூட்டணியின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மனோ அறிவிப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

‘சூரியன்’ வானொலியில் ஒலிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கூட்டணியில் தகுதியானவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தலைவராவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை, அழைப்பு விடுத்தால் அது தொடர்பில் அரசியல் குழு முடிவெடுக்கும் எனவும் மனோ தெரிவித்துள்ளார்.

-(3)