செய்திகள்

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம்…….!

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநகைச்சுவை நடிகர் குமரிமுத்து நேற்று ( 28.02.2016 ) இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

வித்தியாசமான சிரிப்பினால் நம்மை கலகலவென சிரிக்க வைத்தகுமரிமுத்து இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

N5