செய்திகள்

நகை கடையில் துப்பாக்கிப் பிரயோகம் நால்வர்; காயம்!!

கம்பளை கெலிஓயா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

நகைக் கடையில் கொள்ளையிடுவதற்காக நேற்றுப் பிற்பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வருகைதந்த சிலர், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளையர்கள் இருவரும் நகைக் கடைக்குள் நுழைந்து, நகைகளை கொள்ளையிட்டமையை வெளியிலிருந்த ஒருவர் அதனை வீடியோ பதிவுசெய்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, தப்பிச்செல்வதற்கு முயற்சித்துள்ளனர்.

இதன்போது, கொள்ளையர்களை பிடிப்பதற்கு முயற்சித்தவர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் நால்வர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.