செய்திகள்

நக்சலைட்களுக்கு இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக ஆயுதம்? இந்தியா குற்றச்சாட்டு

நக்சலைட்டுகளுக்கு இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக புதியரக ஆயுதங்களை பெற்றுக்கொள்வதாக கிடைத்துள்ள புலனாய்வுத் தகவலையடுத்து இந்திய மத்திய உளவுத் துறை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கடல் மார்க்கமாகவே நக்ஸல்களும் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பெற்று வருவதாக புலனாய்வு துறையின் உயர் மட்டத்தினர்க்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டு ஏசியன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள தகவல் களுக்கமைய இந்த ஆயுதங்கள் இலங்கையிலிருந்தே கடல் மார்க்கமாக நக்ஸல்களிடம் சென்றடைவதாக சந்தேகம் எழுந்திருப் பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நக்ஸல்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை நேபாளம் மற்றும் மியன்மாருக்கூடாக பெற்று வருவது ஊர்ஜிதமாகியுள்ளது. இந்த நிலையில் மாவோஸ்டுகளும் பயன்படுத்தக்கூடிய விதத்திலான புதிய விநியோகப் பாதை குறித்து புலனாய்வு துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏகே – சீரிஸ் ரீப்ள்ஸ். கண்ணி வெடிகள். கிரனேட் தொடர்பாடல் சாதனங்கள், இரவு நேரத்தில் பயன் படுத்தக்கூடிய உபகரணங்கள் உள்ளிட்ட புதிய ரக ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களையே நக்ஸல்கள் மேற்படி கடல் வழி மார்க்கமாக பெற்றுக் கொள்வதும் தெரிய வந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு முன்னர் ஆயுதம் விநியோகித்த நபர்களே நக்ஸல்களுக்கும் ஆயுதங்களை விநி யோகித்து வருகின்றனர். இந்த ஆயுதப் பரிமாற்றமானது விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இருந்த காலம் தொட்டு கடல்வழி மார்க்கமாக நடைமுறையிலிருந் துள்ளது.

தற்போது அதே பாதை நக்ஸல்களுக்கு ஆயுதம் விநியோகிக்கவும் பயன்படுத் தப்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும்.

நக்ஸல்களுக்கு நிதியும் ஆயுதங்களும் கிடைக்குமிடத்து அது பாதுகாப்பு படையினர்க்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் சிரேஷ்ட புலனாய்வு துறை அதிகாரி யொருவர் இந்த செய்தி நாளிதழுக்கு கூறியுள்ளார்.

நக்ஸல்கள் கடந்த சில தினங்களுக்குள் படையினர் மீது பாரிய மூன்று தாக்குதல்களை நடத்தியிருந் ததாகவும் ஏசியன் ஏஜ் செய்தி வெளியிட்டுள்ளது.