செய்திகள்

நடன அழகிகளை மீண்டும் ஆட சொல்லி தொல்லை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சிக்கல்

நடன அழகிகளை மீண்டும் ஆட சொல்லி தொல்லை கொடுத்த பாகிஸ்தான் வீரர்கள் உமர் அக்மல், பிலாவால் ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் 20 ஓவர் உலக கோப்பை ப் போட்டியில் ஆடிய உமர் அக்மல், கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று போலீசில் சிக்கினார். இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ளூர் போட்டி ஒன்றில் பங்கேற்ற இவர்,சக வீரர்களான பிலாவால், முகமது நவாஸ், ஓவைஸ் ஷா, சாகித் யூசுப் ஆகியோருடன் நடன நிகழ்ச்சியை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது ஒரு குறிப்பிட்ட பாடலுக்கு மீண்டும் ஆடும் படி நடன அழகிகளை அவர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர்களுடன் வீரர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. இதனால் அந்த வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வீரர்கள் மீது எழுந்துள்ள இந்த புகார் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.