செய்திகள்

நடப்பு சம்பியனான ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

உலக கோப்பை உதைப்பந்தாட்ட நடப்பு சம்பியனான (2014 போட்டி) ஜெர்மனி அணி இம்முறை முதல் சுற்றிலேயே போட்டித் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
தென்கொரியாவுடன் இன்று நடத்தப்பட்ட போட்டியில் 2-0 கோல்கள் என்ற ரீதியில் தோல்வியடைந்து போட்டித் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
இதற்கு முன்னர் ஜெர்மனி அணி 1938ஆம் ஆண்டிலேயே முதல் சுற்றில் வெளியேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. -(3)