செய்திகள்

நடிகர் ராஜேந்திரனின் கலக்கல் நடனம்! அசந்த படக் குழுவினர்

நான் கடவுள் ராஜேந்திரன் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார். பாலா இயக்கிய ’நான் கடவுள்’ மூலம் பிரபலமானவர் ராஜேந்திரன்.

முதல் படத்திலேயே தன் நடிப்பால் ரசிகர்களை மிரட்டிய ராஜேந்திரன், அதன் பிறகு பல படங்களில் வில்லனாக நடித்து கலக்கினார். தற்போது வில்லனாக மட்டுமில்லாமல் காமெடியிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் நான் கடவுள் ராஜேந்திரன் இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையே என்கிற படத்தின் மூலம் பாடகர் அவதாரமும் எடுத்துள்ளார்.

இந்தப் பாடலை அவர், கானா பாலா, பாடகர் வேல்முருகன் ஆகியோருடன் இணைந்து பின்னணி பாடியிருக்கிறாராம். மேலும் படத்தில் அவர் பாடலை பாடியிருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் இணைந்து நடனமும் ஆடியிருக்கிறாராம். இந்த பாடலைத்தான் படத்தின் புரமொஷனுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழு.