செய்திகள்

நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!

சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா இன்று சனிக்கிழமை (24) அதிகாலை காலமானார்.

மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். மாலினி பொன்சேகா உயிரிழக்கும் போது அவருக்கு 76 வயதாகும்.

அதேவேளை பைலட் பிரேமநாத் என்ற இந்திய- இலங்கை கூட்டுத் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மாலினி பொன்சேகா , தமிழ் இரசிகர்களிடையே அவர் பேசப்படும் ஒருவரானார்.