செய்திகள்

நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கெதிராக நடவடிக்கை

நந்திக்கடல் பிரதேசத்தில் தற்போது இறால்பருவம் இடம்பெறுவதால், வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் இரவு வேளைகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலை, கூட்டு வலை, படுப்பு வலைகள் பயன் படுத்தி மீன் மற்றும் இறால் பிடியில் ஈடுபடுவதாக அங்குள்ள மக்கள் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து முல்லைத்திவு மாவட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் இவ்விடயங்களை கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கையாண்டு கடல் வளத்தையும் சுரண்டுகின்ற எவருக்கும் இடம் கொடாது உடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் பணித்துள்ளார்.

ஒரு சிலரது சுயநலத்துக்காக கடல் வளத்தை அழிக்க இடமளிக்க முடியாது என்று என்றும் சட்டத்தின் முன் யாவரும் சமன் என்றும் அவர் தெரிவித்தார்.