செய்திகள்

நபரொருவரை மோதிவிட்டு தப்பிச்சென்ற லொறி தொடர்பான விசாரணைகளை அட்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில், குடாகம பிரதேசத்தில் நபரொருவரை மோதிவிட்டு தப்பிச்சென்ற லொறி தொடர்பான விசாரணைகளை அட்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

18.03.2015 அன்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 48 வயதுடைய நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.படுகாயமடைந்த நிலையில் இருந்த குறித்த நபரை பிரதேச மக்கள் மீட்டு, கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த நபர் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  அதிவேகமாக பயணித்த லொறி மோதியதையடுத்து குறித்த நபர் சில அடிகள் தூரம் தூக்கியெறியப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா.

 

DSC08909 DSC08910 Still0319_00000