செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணயை கருத்திற் கொண்டு பிரதமர் பதவி விலக வேண்டும் : ஐ.ம.சு.கூ கோரிக்கை

தனக்கு எதிரான நம்பிக்கையில்லாபழரேரயை கருத்திற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரம உடனடியாக பதவி விலகவேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர  கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மையான எம்.பிக்களின் ஆதரவுடன் சபாநாகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இனியும் பிரதமர் அந்த பதவியில் இருக்க கூடாது. தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கருத்திற் கொண்டு அவர் பதவி விலக வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.