செய்திகள்

நம்மாழ்வார் விருதுக்கான நன்கொடையாளர்கள் அழைப்பு

மண்ணையும், மக்களையும் நேசித்து இறுதி மூச்சு உள்ளவரை போராடிய இன்று விதைக்காக கூட பன்னாட்டு கம்பெனிகளை நம்பிடாமல் தொலைந்து போன பல்வேறுபட்ட மண்ணின் விதைக்களை மீட்டெடுத்தன் விளைவால்இ நாம் இன்று சுயசார்பாக வாழ வழிவகுத்த மகானின் பிறந்த நாளான ஏப்ரல் 6, 2015 யை  ‘ பாரம்பரிய விதை நாள்’ ஆக வானகம் அறிவித்து, அதைக் கொண்டாட உள்ளது.
அந்த நாளில் உண்மையோடு மண்ணோடு மண்ணாக, மரங்களோடு மரங்களாக. பூச்சிகளோடு பூச்சிகளாக‌ இந்த இயற்கைக்காகவும், நமக்காகவும், அதிகார சக்திக்கு எதிராகவும் உழைத்துக்கொண்டிருக்கும் ஆன்மாக்களை வானகத்தில் வைத்து கொண்டாட வேண்டும் என்பது நம்மாழ்வார் அய்யாவின் நீண்டநாள் வாஞ்சை. அப்படிப்பட்ட நபர்களை சிறப்பிக்கும் விதமாக ‘ நம்மாழ்வார் விருது ‘ வழங்கப்படுகிறது.
இன்று பெரும்பான்மையானவர்கள் பெருநகரங்களில், அதுவும் குளிரூட்டப்பட்ட, காற்றின் சப்தம்கூட கேட்காமல் இறுக்கி தாழிடப்பட்ட அறையில் மிக பிரபலமான பன்னாட்டு கம்பெனியின் பட்டைகளை ஒட்டிய நீர்புட்டிகளை வைத்துக்கொண்டு விவசாயம்இசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதிகாரமையமாதல் பற்றியும் மிகதீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

அய்யாவின்இந்த ஆசையினை நிறைவேற்றும் விதமாக அய்யாவின் பிறந்தநாளனான ஏப்ரல் 6, 2015ல் திங்கிழமை அந்த உன்னதஆன்மாக்களை தேர்ந்தெடுத்து அவரின் பெயரிலேயே ‘நம்மாழ்வார்’ விருது கரூர் மாவட்டம் கடவூரில் இயங்கி வரும் ” வானகத்தில் -நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் – வழங்கப்படஉள்ளது. இதில் மக்களாகிய நமது சிறு பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று வானகமும் அதன் நண்பர்களும் எதிர்பார்க்கின்றனர்.