செய்திகள்

நயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கெத்து போட்டோ

அண்மையில் சென்னை வருமானத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகை நயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார். டாப் ஹீரோக்கள் படம் என்றாலே முதலில் நயன்தாரா கால்ஷீட் செக் பண்ணுங்க என்று சொல்லும் அளவிற்கு தனி இடம் பிடித்துள்ளார். நடிப்பிலும் பில்லா போன்ற கிளாமர் படமானாலும் சரி, அறம் போன்ற ஹீரோயின் சப்ஜெக்ட் ஆனாலும் சரி கலக்கி அடிக்கிறார்.

தற்போது சூப்பர் ஸ்டார் உடன் தர்பார் படத்தை கையோடு, ஆர்.ஜே. பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார். அந்த படத்தின் செகண்ட் லுக் கூட சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து மீண்டும் சூப்பர் ஸ்டாரின் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ள நயன்தாரா அதற்காக ஐதராபாத் சென்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின. அந்த படத்தை முடித்த பிறகு காதலன் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள காத்து வாங்குல இரண்டு காதல் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படி தொடர்ந்து படங்களில் நடிப்பதற்காக பிசியாக பறந்து கொண்டே இருந்தாலும், நயன் மற்ற பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். சினிமா தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டேன் என்பதை கொள்கையாக கொண்டிருந்தாலும் நயன்தாரா மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

Nayan