செய்திகள்

நயன்தாரா திருமண தேதி முடிவானது?

நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரும் கோவில்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஜோடியாக செல்லும் புகைப்படங்களை வலைத்தளத்தில் அடிக்கடி பகிர்கின்றனர். இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு பதில் அளித்து விக்னேஷ் சிவன் கூறும்போது, ‘’எங்கள் இருவருக்கும் காதல் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. காதல் போர் அடிக்கும்போது திருமணம் செய்து கொள்வோம்’’ என்றார். எல்லோருக்கும் தெரிவித்த பிறகே திருமணத்தை நடத்துவோம் என்றும் கூறினார். தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் துபாய் சென்று புத்தாண்டை கொண்டாடி வருகிறார்கள். அங்குள்ள உயரமான கட்டிடத்தின் அருகே நின்று புத்தாண்டை கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் ’யாரெல்லாம் 22-2-22 தேதியில் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள். அந்த தேதியை நான் வீணாக்க விரும்பவில்லை’’ என்று பதிவு வெளியிட்டு உள்ளார். இந்த தேதியில்தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவுவதுடன் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.(15)