செய்திகள்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினருடன் கலந்துரையாடிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் (படங்கள்)

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர்கள் தொடர்பான அதிகாரி ரொசினா தமன்வெல மற்றும் இலங்கைக்கான அமெரிக்க உயரிஸ்தானிகராலய அரசியல் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி ஜோசப் செல்லர் ஆகியோர் இன்று (09.04.2015) நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.ஆர்.நஜா முஹம்மத் மற்றும் அதன் தேசிய அமைப்பாளர் எம்.பி.எம்.பிர்தௌஸ் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

கொழும்பில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான இலங்கையின் நல்லாட்சி நிலைமைகள், மீள் இணக்கப்பாட்டிற்கான முன்னெடுப்புக்கள், ஊழல் மோசடிகள் தொடர்பில் மேன்னேடுக்கப்படும் நடவடிக்கைளின் முன்னேற்றம், இது தொடர்பில் கடந்த 9 வருடங்களாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டுவரும் அரச மற்றும் சிவில் சமூகச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கூடாக அரசியல், சிவில் சமூகத்தளங்களில் ஊழல், மோசடிகளற்ற வெளிப்படைத் தன்மையான வகையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டதோடு அதனை ஒரு தேசிய வேலைத் திட்டமாக முன்னெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.

இன்றைய இலங்கையின் புதிய அரசியல் சூழ்நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்ற முற்போக்கானதும் நல்லாட்சி விழுமியங்களின் அடிப்படையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் சக்திகளைத் தாம் பெரிதும் வரவேற்பதாகவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்தகால செயற்பாடுகளும் முன்னெடுப்புக்களும் தமக்கு பெரிதும் நம்பிக்கையளிப்பதாகவும் இது கண்டு தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

w1

w2