செய்திகள்

நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடந்த அரசு முயற்சிக்கவில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் ஹக்கீம்

கடந்த அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு கண்டு நாட்டில் வாழும் சமூ­கத்­தினர் மத்­தியில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­த ற்கு இதய சுத்­தி­யோடு முயற்­சிக்­க­வில்லை எனக் குறிப்­பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்கள் மத்­தியில் நிலவும் சந்­தே­கங்­களைப் போக்கி இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நம்­பி க்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு புதிய அர­சாங்கம் ஆர்­வ­மாக இருப்­ப­தா­கவும் கூறி னார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் அர­சியல் விவ­கா­ரத்­தி­ணைக்­க­ளத்தின் துணைச் செய­லாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நகர அபி­வி­ருத்தி நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமை அவ­ரது இல்­லத்தில் கடந்த சனிக்­கி­ழமை மாலை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டிய போதே அவர் இதனைத் தெரி­வித்தார். இலங்­கைக்­கான ஐ.நா. வதி­வி­டப்­பி­ர­தி­நி­தியும் மனி­தா­பி­மான இணைப்­பா­ள­ரு­மான சுபினே நண்டி, ஐ.நா. அர­சியல் விவ­கா­ரத்­தி­ணைக்­க­ளத்தின் ஆசிய பசுபிக் பிராந்­திய தலைவர் மேரி யம­சிடா ஆகி­யோரும் இக் கலந்­து­ரை­யா­டலில் பங்­கு­பற்­றினர். இந்த உரை­யாடல் ஒரு மணி நேரம் நீடித்­தது.

யுத்தம் முடி­வ­டைந்­துள்ள சூழ்­நி­லையில் கடந்த ஐந்­தாண்­டு­க­ளுக்கு மேற்­பட்ட காலப்­ப­கு­தியில் நாட்டில் இனங்­க­ளுக்கு மத்­தியில் நல்­லி­ணக்­கத்­தையும் நம்­பிக்­கை­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முன்­னைய அர­சாங்கம் போதிய கவனஞ் செலுத்­தா­த­தற்கும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளா­த­தற்­கு­மான கார­ணங்­களை அறிந்து கொள்­வ­தற்­காக ஐ.நா. துணைச் செய­லாளர் நாயகம் அமைச்­ச­ரிடம் சில கேள்­வி­களை எழுப்­பினார்.

அவற்­றிற்குப் பதி­ல­ளிக்கும் போது முஸ் லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக் கீம் மேலும் தெரி­வித்­த­தா­வது,எங்­க­ளது கட்சி பிள­வு­ப­டாது பாது­காப்­ப­தற்­கா­கவும் நாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்­களின் குறைந்த பட்ச தேவை­க­ளை­யா­வது நிறை­வேற்­று­வ­தற்­கா­கவும் விருப்பக் குறை­வோ­டா­வது மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாக இருந்­தது.

யுத்­தத்தை வெற்றி கொண்டு விட்­ட­தாக இறு­மாப்பில் இருந்த முன்­னைய ஜனா­தி­பதி இனங்­க­ளுக்­கி­டை­யி­லான துரு­வப்­ப­டுத்­த லைக் குறைப்­ப­தற்கும் விரி­சலை நீக்­கு­வ­த ற்கும் என வெறும் கண் துடைப்­பிற்­காக சில காரி­யங்­களைச் செய்­தாரே தவிர உண்­மை­யான இதய சுத்­தி­யோடு எந்­த­வி­த­மான பய­னுள்ள முன்­னெ­டுப்­புக்­க­ளையும் அவர் மேற்­கொள்­ள­வில்லை.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காண்­ப­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நிய­மித்த பாரா­ளு­மன்றத் தெரிவுக் குழுவில் அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­ யாக இருந்த இந்­நாட்டு முஸ்­லிம்­களின் அதி­க­பட்ச ஆணையைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்­கிரஸ் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­ வில்லை. அது­மட்­டு­மல்­லாது சர்­வ­கட்சி பிர­தி­நி­திகள் குழுவின் தலை­வ­ராக இருந்த இட­து­சாரி அர­சியல் தலை­வர்­களில் ஒரு­வ­ரான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண கூட அதில் இடம்­பெறச் செய்­யப்­ப­ட­வில்லை. வேண்­டு­ மென்றே நாம் முன்­னைய அர­சாங்­கத்­தி னால் புறக்­க­ணிக்­கப்­பட்டோம்.

சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கு எதி­ராக தெற்கில் இன­வாதம் கட்­ட­விழ்த்து விடப்­ப ட்­டது. பொது பல சேனா மற்றும் பேரி­ன­வாதச் சக்­தி­க­ளுக்கு அப்­போ­தைய அர­சாங்க உயர் மட்­டத்­தி­னரின் அனு­ச­ரணை கிடைத்­தது. அவர்கள் போஷித்து வளர்க்­கப்­பட்­ட னர்.

இன­வாதம் மட்­டு­மல்­லாது ஊழல் மற்றும் மோச­டிகள் நிறைந்த அப்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு முடிவு கட்­டு­வ­தற்கு சிறு­பான்­மை­யினர் உட்­பட நாட்டு மக்­களில் பெரும்­பான்­மை­யானோர் முன்­வந்­தனர்.

மலர்ந்­துள்ள புதிய ஆட்­சியில் பாரா­ளு­ மன்ற சம­நி­லையைப் பேணு­வதில் நிலவும் கருத்து வேறு­பா­டுகள் முந்­திய ஜனா­திபதி யின் விசு­வா­சி­களின் செயற்­பா­டுகள் என் பன சவாலாக இருந்த போதிலும் நூறு நாள் திட்டத்தின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலொன்றை நடத்தி தேசிய அரசாங்க மொன்றை நிறுவி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகி யோர் மிகவும் முனைப்பாகவுள்ளனர்.

நான் நீதியமைச்சராக பதவி வகித்த போது பாராளுமன்றத்தில் சட்டமாக்க முன்வந்த முக்கிய சட்டங்களை முன்னைய ஆட்சி தடுத்து நிறுத்தியது என்றார்.