செய்திகள்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல் செய்ய அரசு திட்டம்: கமலேஷ் சர்மா

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்கு இலங்கை அரசாங்கம் ஆலோசனை நடத்திவருவதாக பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்திருக்கின்றார்.

இலங்கைக்கான தன்னுடைய குறுகியகால விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பும் நிலையில் இன்று காலை வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே கமலேஷ் சர்மா இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் போர்க் குற்றங்கள் தொடர்பாக நம்பகத்தன்மையான உள்நாட்டு விசாரணை ஒன்றை முன்னெடுப்பதென்ற அரசாங்கத்தின் நோக்கத்தையும் அவர் வரவேற்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய தலைவர்கள் பலரையும் சர்மா சந்தித்திருந்தார்.