செய்திகள்

நல்லிணக்க படைவீரர் கிராமம் ஏப்ரல் 3 இல் ஜனாதிபதியால் திறப்பு

வுனியா கொக்எலிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான 51 வீடுகளைக் கொண்ட நல்லிணக்க படைவீரர் கிராமத்தை எதிர்வரும்   3 ஆம் திகதி ஜனாதிபதி திறந்துவைக்கவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரிவின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டம் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டதென பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில்  அவர் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;

நல்லிணக்க படைவீரர் கிராமம்  40 பேர்ச்   வீதம்  80 காணித் துண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 51 வீடுகளை உத்தியோகபூர்வமாக படைவீரர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி ஜனாதிபதி கையளிக்கவுள்ளார்.

சம்பிரதாயம்,  எதிர்பார்ப்பு, எண்ணம் மற்றும் இராணுவ மனோநிலையற்ற படைவீரர், மானிட பழக்க வழக்கமுடைய ஒரு பிரஜை  என்பதை சகல  சமூகங்களுக்கும் காண்பித்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தை செயற்பாட்டில் கொண்டுவரும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளவர்களின் மத்தியில் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ள தமிழ் பெண் வீராங்கனையும்  தமிழ் பெண்மணிகளை திருமணம் செய்துகொண்ட இராணுவ வீரர்கள் ஏழு பேர் உட்பட படைவீரர்களும் அடங்குவர். இது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான நல்லதொரு நடவடிக்கையாகக் காணப்படுகிறது.

இலங்கை இராணுவத்தின் 4 ஆவது பொறியியல் சேவை ரெஜிமன்ட்டினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த வீட்டுத் திட்டத்திற்குத் தேவையான நிதி நமக்காக  நாம் வீடமைப்பு நிதியம்  மற்றும் அரசாங்க நிதியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அமைய முப்படையினரின் பங்களிப்புடன் அந்த வீடுகளை முழுமையாக கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றின் முழுமையான பெறுமதி 2 மில்லியன் ரூபாவாகும். சகல பொது வசதிகளுடன் இது அங்கசம்பூர்ணமான கிராமமாக உருவாகும்.

இந்த வீடமைப்புத் திட்டத்தின் போது பொது தேவைகளாக அடையாளங்காணப்பட்டுள்ள விளையாட்டு மைதான அபிவிருத்தி செய்யும் பணி இலங்கை கடற்படையினராலும் சிறுவர் மைதானத்தை அமைக்கும் பணி இலங்கை விமானப் படையினராலு, சனசமூக நிலையம் நிர்மாணிக்கும் பணி இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துடன்  வீட்டுத் தோட்டம், நிர்மாண மற்றும் அலங்கரிப்பு நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட ரெஜிமன்ட் மூலம் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

n10