நல்லூர் தேர்த் திருவிழா – நேரலை!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா ஆரம்பமானது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 24ஆம் நாளான இன்று தேர்த் திருவிழா தற்போது வெகு விமர்சையாக ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது அதனை நேரலையாக காணக்கூடியதாக உள்ளது.
நல்லூர் கந்தன் சுமார் 22 நாட்கள் வள்ளி தெய்வானை சகிதம் இன்று தங்க இரதத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கின்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு நல்லூரானின் மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறும்.
அதன்படி, நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் இறுதி நான்கு நாட்களாக எதிர்வரும் நாட்கள் காணப்படுகின்றன.
தற்போது தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் இதனைத் தொடர்ந்து 25ஆம் நாளான நாளைய தினம் காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி 26ஆம் நாள் திருவிழாவாக பூங்காவனம் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
மேலும், இறுதி நாளான எதிர்வரும் 16ஆம் திகதி வைரவர் உற்சவத்துடன் நல்லூர் கந்தனின் மகோற்சவம் இனிதே நிறைவு பெறவுள்ளது.
-(3)
LIVE