செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

 

இலங்கை பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஒப்பமிட்டு அதனை அரச அச்சகத்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். இதன்படி, இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது.
20 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரேயே பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , இன்று சபை அதனை விவாதிக்கவிருந்தது. எனினும், அதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்றத்தில் கிடைக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முடிவு எடுத்ததாக தெரியவருகிறது.