செய்திகள்

நவாஸ் செரீப் மீது ஊழல் விசாரணை

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அந்த நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செரீப் 1991–ம் ஆண்டு பண பரிமாற்றத்தில் ஊழல் செய்து வெளிநாடுகளில் சொத்து வாங்கியதாக குற்றச்சாட்டு.
சுமத்தப்பட்டுள்ளது இது குறித்தே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
அந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த லாகூர் ;உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரணை நடத்த நீதிபதி மன்சூர் அகமது மாலிக் உத்தரவிட்டார். இக்குழு நீதிபதி பரூக் இர்பான்கான் தலைமையில் செயல்படும்.