செய்திகள்

நவீன மருத்துவமுறைகளைக்கொண்ட பல்வேர் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக நவீன மருத்துவமுறைகளைக்கொண்ட பல்வேர் சிகிச்சை நிலையம் வவுணதீவு பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு புதுமண்டபத்தடி பிரதேச வைத்தியசாலையில் இந்த நிலையம் நேற்றுக் காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு பிரதேச அபிவிருத்தி நிறுவனம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையுடன் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்த நிலையம் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக கடைவாய் முன் மற்றும் கடைவாய்ப்பல்லுகளுக்கான சிகிச்சை முறைகள் வழங்கப்படவுள்ளதாக புதுமண்டபத்தடி பிரதேச வைத்தியசாலையின் பல் வைத்திய நிபுணர் டாக்டர் கே.முரளிதரன் தெரிவித்தார்.

இது தொடர்பான நிகழ்வு நேற்றுக் காலை புதுமண்டபத்தடி பிரதேச வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.மோகனகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன், சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பிரகாஸ்,வவுணதீவு அபிவிதுத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டிலிமா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேர் சிகிச்சை நிலையத்துக்கான ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் இதன்போது சிறுவர் நிதியத்தினால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த சிகிச்சை நிலையம் மூலம் பல் புடுங்கும் நடவடிக்கைகளை 95வீதமாக குறைக்கமுடியும் என பல்வைத்திய நிபுணர் கே.முளிதரன் தெரிவித்தார்.

இந்த சேவையினை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல பகுதி மக்களும் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

IMG_0123 IMG_0075 IMG_0117 IMG_0089