செய்திகள்

நவ்ரு தீவில் சிறுவர்கள் பாரிய ஆர்ப்படம்: கம்போடியாவுக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு!

அவுஸ்திரேலியாவிலுள்ள நவ்ரு தீவு அகதிகளை மீண்டும் கம்போடியாவுக்கு அனுப்புவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ள நிலையில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் ஆர்ப்படமனது சுமார் 100 சிறுவர்களுக்கு மேற்ப்பட்டோரால் அங்கு  தற்ப்போது நடத்தப் படுகின்றது.

இன்று தொடங்கிய ஆர்ப்படம் தங்களுக்கு சரியான முடிவு வரும்வரைக்கும் தொடர்ந்து முன்னெடுக்க வுள்ளதாக சிறுவர்கள் கூறி யுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சிறுவர்கள் எவரும் தடுப்பு முகாம்களில் இல்லை அனைவரும் சமூகத்துடன் இணைக்கப் பட்டுள்ளதாக அவுஸ்ரேலியா குடிவரவு அமைசர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.