செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று மருந்தகங்கள் திறக்கப்படும்

நாட்டின் அனைத்து மருந்தகங்களும் இன்று 9ஆம் திகதி முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பசில் ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற அவசர சேசைகளுக்கான ஜனாதிபதி செயலணி இதற்கான முடிவை எடுத்துள்ளது.இதன்படி கொரோனா வைரஸ் பரவலில் அதிக ஆபத்தான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை ஆகிய இடங்களிலும் மருந்தகங்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஆயுர்வேத மருந்தகங்களையும் இந்த காலப்பகுதியில் திறப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் ஒரு மருந்தகம் அல்லது நடமாடும் சேவைக்கு அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.(15)