செய்திகள்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டம்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறையை ஏற்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையாநாயுடு, இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலேசிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பரந்த கருத்தொற்றுமை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறிய வெங்கையா நாயுடு ஒரு சட்டத்தினால் மட்டுமே இதை செய்து விட முடியாது என குறிப்பிட்டார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சட்டம், நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் தீவிரப் பரிந்துரை செய்துள்ளதை வெங்கையா நாயுடு சுட்டிக்காட்டினார்.

N5