செய்திகள்

நாடாளுமன்றில் எதிர்கட்சி மீது தாக்குதல் முயற்சி – நாடாளுமன்ற விவாதங்களைப் புறக்கணிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

நாடாளுமன்ற விவாதங்களைப் புறக்கணிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்தையடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இந்த இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது.இதன்போது அங்கிருந்த அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த தாக்குதல் முயற்சியை தடுத்து நிறுத்தியதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்துள்ளார்.நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் மனுஷ நாணயக்கார மீது இரண்டு தடவைகள் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றதாக தெரிவித்தார்.இதேவேளை படைக்கல சேவிதரும் நாடாளுமன்ற பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)