செய்திகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்க உள்ளது.

உத்தராகண்ட் அரசியல் குழப்பங்கள், மல்லையா விவகாரம், வரட்சி என நாடுமுழுவதும் பல்வேறு விஷயங்கள் புயலை கிளப்பிக்கொண்டிருக்கும் வேளையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நாளை தொடங்குகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இந்த இரண்டாவது பகுதியில் பினாமி பண பரிவர்த்தனை திருத்தச்சட்டம் , சாட்சியங்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம், உள்ளிட்ட சில முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே உத்த்ராகண்ட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது கண்டன தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

பதான்கோட் விமான தள தாக்குதல் விவகாரத்தில் விசாரணை நடத்த விசாரணை குழுவினருக்கு மத்திய அரசு அனுமதி அளித்த விவகாரம், மஹாராஸ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலவி வரும் கடுமையான வறட்சி, இஸ்ரத் ஜஹான் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த தொடரில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 15 நாட்கள் இந்த இரண்டாவது அமர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

N5