செய்திகள்

நாடு திரும்ப விருப்பமுள்ள இந்திய அகதிகளின் விபரங்களை தருமாறு இலங்கை அரசு கோரிக்கை

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் இலங்கைக்கு திரும்பி வரவிரும்புகின்ற அகதிகள் பற்றிய விவரங்களை தருமாறு இந்திய தலைவர்களிடம் இலங்கை அரசாங்கம் கேட்டுள்ளது.

பல ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்தாலும் எல்லோரும் திரும்பி வரவிரும்பமாட்டார்களென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

எனவே இலங்கை திரும்ப விரும்புவோரின் விவரங்களை கேட்டோம். இந்தியாவில் நிரந்தரமாக குடியேறிய இலங்கை அகதிகளும் உள்ளனர். அவர்கள் திரும்பி வர விரும்பவில்லை. திரும்பி வர விரும்புவோரும் உள்ளனர் என அவர் கூறினார்.

கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால புதுடில்லிக்கு சென்றார். அவர் தலைமையிலான குழுவில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் இருந்தார். அவர், மீள் குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கம் கண்டுள்ள முன்னேற்றங்களை பற்றி இந்திய தலைவர்களுக்கு விளக்கினார்.