செய்திகள்

நாடு பூராகவும் கடும் வரட்சி : நீர் விநியோகம் தடைப்படும் அபாயம்

நாடு பூராகவும் நிலவும் கடும் வரட்சியுடனான கால நிலை தொடருமாகவிருந்தால் எதிர்வரும் நாட்களில் பல பிரதேசங்களில் நீர்வெட்டை அமுல் படுத்த நேரிடுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தள்ளது.

எதிர்வரும் தினங்களுக்கு போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்காவிட்டால் எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடுமெனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நீர் விநியேகத்திற்காக நீரை பெற்றுக்கொள்ளும் நீர் நிலைகளில் நீரின் அளவு குறைவடைந்து வரும் நிலையில் நீரை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
R-06